வவுனியாவில் பணம், நகை கொள்ளை!
sri lanka
vavuniya
people
By Shalini
வவுனியா குடியிருப்பு பகுதியில் வீட்டினை உடைத்து பெருமளவு பணம் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று மாலை வீட்டில் யாருமில்லாததை அறிந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டின் பிரதான வாயிலை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
இதன்போது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நான்கு பவுண்நகை மற்றும் 3 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.