டித்வா சூறாவளியால் அழிந்துபோன வீடுகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது
டித்வா சூறாவளியால் இலங்கை முழுவதும் முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 6,000 ஐ தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்(DMC) தெரிவித்துள்ளது.
சமீபத்திய புதுப்பிப்பின்படி, நாடு முழுவதும் 6,164 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 112,110 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
கண்டி மாவட்டத்தில் அதிகசேதம்
கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,013 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து நுவரெலியாவில் 767 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. புத்தளத்தில் அதிகபட்சமாக 21,137 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.632 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

குருநாகல், பதுளை, கேகாலை, கம்பஹா, மாத்தளை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இதேவேளை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

மேலும் 211 பேர் காணாமல் போயுள்ளதாக DMC தெரிவித்துள்ளது. 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன, நாடு முழுவதும் 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 10 மணி நேரம் முன்