கனடாவில் வீடு விற்பனை தொடர்பில் வெளியான தகவல்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், ரொறன்ரோ (toronto) பெருநகரப் பகுதியில் (GTA) பெப்ரவரி மாத வீட்டு விற்பனை 2 வீதத்தினால் குறைந்துள்ளது, என டொரொண்டோ வீட்டு மனை சபை Toronto Regional Real Estate Board (TRREB) அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரியில் 5,562 வீடுகள் விற்கப்பட்ட நிலையில், இந்த வருடம் பெப்ரவரி மாத்தில் 4,037 வீடுகளே விற்கப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை ஓராண்டு காலத்தில் 27 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
சராசரி விற்பனை விலை
மேலும் கடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில், விற்பனை 28.5 வீதம் சரிவடைந்துள்ளது.
எனினும், சராசரி விற்பனை விலை 1,084,547 டொலர்களாகும், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 2.2% குறைந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தில் 12,066 புதிய வீடுகள் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதுதுடன் இது கடந்த ஆண்டைவிட 5.4% அதிகமாகும்.
கடன் விகிதங்கள் (borrowing costs) விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், வீடுகளை கொள்வனவு செய்வதற்கான இயலுமை அதிகரிக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
