தனியார் பேருந்து நடத்துநரான தமிழரின் நேர்மை - குவியும் பாராட்டுகள்(படங்கள்)
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் தனது பணம் உட்பட அவற்றை கண்டெடுத்து வழங்கிய தனியார் பேருந்தின் நடத்துனர் ஷாம் குமாருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் (04) பிற்பகல் 3.30 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து ஹட்டன் பகுதிக்கு பயணிக்க ஆரம்பித்த பேருந்தில் ஒரே நேரத்தில் 13 பேர் வந்ததாகவும், அவ்வாறே வந்தவர்களில் ஒருவர் தனது தொலைபேசியில் அழைத்து முன்பதிவு செய்யுமாறு கோரியதாகவும் நடத்துனர் தெரிவித்தார்.
தவறவிடப்பட்ட பணப்பை
இருக்கையை முன்பதிவு செய்யச் சொன்ன பயணியிடம் பேருந்தின் என்ஜினில் அமர்ந்து வரச் சொன்னதாகவும், சிறிது நேரம் கழித்து நகரத்திலிருந்து இறங்கிய அந்த பயணி தனது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து பேருந்தில் பணப்பை விழுந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பணி முடிந்து வீடு திரும்பும் போது
எனினும் பேருந்தின் இன்ஜினில் பணப்பை காணப்பட்டதாக நடத்துனர் கூறினார். காணாமல் போன பணப்பை பயணியான புஷ்பநாதன் கர்ணன் (21) என்பவர் கொழும்பு பகுதியில் பணி முடிந்து வீடு திரும்பும் போது பணப்பையை தொலைத்துவிட்டதாகவும், பணப்பையில் 40,000/= பணம், தேசிய அடையாள அட்டை, வங்கி அட்டை இருந்ததாகவும் தெரிவித்தார்.
நடத்துனருக்கு நன்றி
அத்துடன் காணாமல் போன பணப்பையை மீட்டுத் தந்த நடத்துனருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் புஷ்பநாதன் கர்ணன் தெரிவித்துள்ளார்.
