வெளிநாடொன்றில் பற்றி எரியும் அடுக்குமாடிக் குடியிருப்பு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
ஹாங்காங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று பயங்கர தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
தாய்போ மாவட்டத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றே இவ்வாறு தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்புப் படை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அந்நாட்டின் தீயணைப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டு 128 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு, நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை
இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவரும் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக, ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனுடன் 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் வசித்து வந்த சுமார் 700 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 7 மணி நேரம் முன்