மாணவர்களை இலக்கு வைத்த மர வியாபாரி : காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை
ஹொரவப்பொத்தானையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 2 கிலோ 100 மில்லிகிராம் துலே என்ற போதைப்பொருளுடன் 50 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹொரவப்பொத்தானை நகரில் மர வியாபாரம் செய்து வரும் சந்தேகநபர் அந்தப் பிரதேசத்தில் வசிப்பவராவார்.
காவல்துறைக்கு கிடைத்த தகவலின்
கடந்த 23ஆம் திகதி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹொரவப்பொத்தானை காவல் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.என்.ஐ. தயானந்தா உள்ளிட்ட காவல்துறை குழுவினர் திடீர் நடவடிக்கையாக இந்த மரக்கடையை ஆய்வு செய்துள்ளனர்.
இதில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 போதைப்பொருள் பொதிகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து
குறித்த சந்தேகநபர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் பொதி ஒன்று 500 ரூபா என்ற விலையில் விற்பனை செய்து வருவது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஹொரவப்பொத்தானை காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எம்.எஸ்.கே..விக்கிரமநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி மேற்கொள்ளப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |