கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
புதிய இணைப்பு
மட்டக்குளிய பகுதியில் நேற்று (16) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர்களில் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய கார், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் அடுத்தடுத்து மோதியுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேசவாசிகள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மட்டக்குளிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் கோர விபத்து! இருவர் பலி நால்வர் படுகாயம்
கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் சம்வப இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துளனர்.
இந்த சம்பவம் இன்று (16.09.2026) மட்டக்குளிய அலுத்மாவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது ஒரு கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட கார் மூன்று மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மட்டக்குளிய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |