வலையிலிருந்து பாய்ந்து கால்நடை மருத்துவரை பதம் பார்த்தது சிறுத்தை
கம்பி வலையில் சிக்கியிருந்த மலைநாட்டுச் சிறுத்தை ஒன்றை மீட்க முயன்ற வனவிலங்கு கால்நடை மருத்துவர் ஒருவர், இன்று காலை அச்சிறுத்தை தன் மீது பாய்ந்து தாக்கியதால் ஒரு திகிலூட்டும் அனுபவத்தை எதிர்கொண்டார்.
ரந்தெனிகல கால்நடை மருத்துவமனையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் அகலங்க பினிதெனிய, அந்தச் சிறுத்தையை மயக்கமடையச் செய்வதற்காக வலையை நெருங்கியபோது, அது வலையிலிருந்து விடுபட்டு அவர் மீது பாய்ந்து தாக்கியதுடன் காட்டுக்குள் ஓடி மறைந்தது.
கால்நடை மருத்துவருக்குச் சிறு காயங்கள்
இச்சம்பவத்தில் கால்நடை மருத்துவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன.

வலையில் சிக்கியிருந்த அந்தச் சிறுத்தை நன்கு வளர்ந்த விலங்கு என்றும், வலையில் சிக்கியபோது அதற்குப் பெரிய அளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அது நல்ல உடல்நலத்துடன் இருந்ததோடு, வலையிலிருந்து விடுபட்டுச் செல்லும் அளவுக்கு வலிமையுடனும் இருந்தது.
images credit daily mirror
ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



