வெப்பமான வானிலை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (25) வெளியிட்ட அறிவிப்பு இன்று வரை (26) முதல் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில், வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரும் வெப்பநிலை, பகல் நேரங்களில் "கணிசமான" அளவில் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
பொதுமக்கள் இதைக் கவனத்தில் கொண்டு மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த மாகாணங்களில் உள்ள பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்கவும் என திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
எனவே, முதியவர்களும் நோயாளிகளும் இந்த நிலைமையில் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும், சிறு குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டுச் செல்லக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கடினமான செயற்பாடுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மெல்லிய, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்