செங்கடலில் மீண்டும் பதற்றம் : ஹவுதிகளின் தாக்குதலில் பற்றி எரியும் கப்பல்
ஏமன் அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் மீது துப்பாக்கிச்சூடு மற்றும்கையெறி குண்டுகளை வீசி ஹவுதி படையினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் கப்பல் தீப்பற்றி எரிவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுனைடெட் கிங்டம் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பின் கூற்றுப்படி, இந்த சம்பவம் ஏமன் துறைமுகமான ஹொடைடாவிலிருந்து தென்மேற்கே 94 கிமீ (51 கடல் மைல்) தொலைவில் நடந்தது.
கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட தாக்குதல்
கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு செங்கடல் கப்பல் போக்குவரத்து மீது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்த வருடம் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்
லைபீரியாவில் பதிவுசெய்யப்பட்ட மேஜிக் சீஸ் என்ற சரக்குக் கப்பலை ட்ரோன் படகுகள், ரொக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் (RPGs) மற்றும் சிறிய ஆயுதங்களுடன் தாக்கினர். அந்தக் கப்பல் தற்போது தீப்பிடித்து எரிகிறது.
தாக்குதலை உரிமை கோரியுள்ள ஹவுதிகள்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இந்த தாக்குதலுக்கு ஹவுதிகள் உரிமை கோரியுள்ளனர்.
பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒரு பிரிவான UK கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO), கப்பலில் இருந்த பாதுகாப்பு குழு தாக்குதலின் போது திருப்பித் தாக்கியதாகவும், "நிலைமை தொடர்ந்து நடைபெற்று வருவதாக" உறுதிப்படுத்தியதாகவும் கூறியது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
