இஸ்ரேல் மீது ஹவுதிகளும் ஏவுகணை மழை
லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும். ஈரான் இராணுவமும் இஸ்ரேல் மீது நேற்று ஏவுகணை மூலம் தாக்கிய நிலையில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிக் குழுவும் இஸ்ரேல் மீது இன்று(08) ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய நகரங்களான டெல் அவிவ், ஜெருசலேமில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. சைரன் சத்தம் கேட்டு மக்கள் பாதுகாப்பு பங்கர்களை நோக்கி ஓடினர்.
வான்பாதுகாப்பு அமைப்புகள்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணையை இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பு வானிலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களை வெளியே வர அறிவிப்பு
இந்தத் தாக்குதலில் ஏவுகணைத் துண்டுகள் விழுந்து யாருக்கும் காயம் ஏற்பட்டவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் அபாயம் முழுமையாக நீங்கிவிட்டதால், பொதுமக்கள் தங்களது தற்காலிகப் புகலிடங்களில் இருந்து வெளியே வரலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

ஈரானைத் தொடர்ந்து ஹவுதிகளும் இஸ்ரேலை தாக்கத் தொடங்கியுள்ளதால் போரானது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை மீறி இஸ்ரேல் செயல்பட்டுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது.
ட்ரம்ப் மீது அதிக அழுத்தம்
ஈரானுடனான போரால் ட்ரம்ப் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் அவர் இப்போரை முடிவுக்கு கொண்டுவர கடுமையாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 20 மணி நேரம் முன்