தொப்பையால் அவதிப்படுகிறீர்களா! ஒரு வாரத்தில் குறைக்கலாம் இதை மட்டும் செய்யுங்கள்...!

Shalini Balachandran
in வாழ்க்கை முறைReport this article
பொதுவாகவே அனைவருக்கும் தொங்கும் தொப்பையானது அதிகரித்துக்கொண்டே இருக்கின்ற நிலையில் இது பெரும்பாலும் தவறான உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது.
தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் தவிர இதற்குப் பின்னால் பல காரணங்களும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தூக்கமின்மை, மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பல சுகாதார நிலைகளும் தொப்பை கொழுப்பிற்கு காரணமாக இருக்கலாம்.
தொங்கும் தொப்பை தோற்றத்தை கெடுப்பது மட்டுமல்லாமல் பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிப்பதோடு தொப்பை கொழுப்பை குறைக்க, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை மற்றும் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
எடை குறைப்பு
நீங்கள் தொப்பையை எளிதில் குறைக்க விரும்பினால் நிபுணர்கள் கூறும் இந்த விடயங்களை பின்பற்றினாலே போதுமானதாக இருக்கும்.
கற்றாழை இன்சுலின் வெளியீட்டை அதிகரிப்பதோடு இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகின்றதோடு வெந்தய விதைகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன.
இவை சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து தொப்பையை குறைப்பதோடு கற்றாழையில் பக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு எடையையும் குறைக்கிறது.
உடல் பருமன்
உடல் பருமனை தடுக்கும் தன்மை கற்றாழையில் உள்ளதோடு இது உடலில் சேரும் கொழுப்பை குறைக்க உதவுவதுடன் மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளது.
இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து எடையைக் குறைப்பதுடன் வெந்தயம் கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. அத்தோடு இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.
மேலும், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் இரும்புச் சத்துகள் கிடைக்கவும் உதவுகிறது.
தொங்கும் தொப்பை
தொங்கும் தொப்பையை குறைப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்
- வெந்தய விதை - 1டீஸ்பூன்
- புதிய கற்றாழையில் இருந்து கற்றாழை ஜெல் எடுக்க வேண்டும்.
- 1 கிளாஸ் தண்ணீரில் 2 தேக்கரண்டி கற்றாழை சேர்த்து கலக்கவும்.
- அதனுடன் 1 தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 21 மணி நேரம் முன்
