யாழ். அராலி வீதியில் உள்ள மதகில் பாரிய குழி! மக்களுக்கு ஏற்படுத்திய அதிர்ச்சி!

Jaffna Sri Lanka
By Harrish Jan 07, 2025 11:47 AM GMT
Report

சேதமடைந்து காணப்படும் யாழ்ப்பாணம் - அராலி வீதியில் உள்ள மதகில் கொங்கிரீட் தகட்டுக்கு உள்ளே கம்பிகள் காணப்படவில்லை என்ற விடயமானது முன்னர் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளின் தரமற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதுடன் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அராலி பாலத்தில் இருந்து யாழ்ப்பாணம் - அராலி துறைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகு ஒன்று பாரிய சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான வீதியாக காணப்படுகிறதுடன் 789 வழித்தட பேருந்து பயணிக்கும் பிரதான வீதியாக இந்த வீதி காணப்படுகிறது.

யாழ். நகரில் ஒரு வழிப்பாதையாக உள்ள முக்கிய வீதிகள் - வடக்கு ஆளுநரின் அதிரடி

யாழ். நகரில் ஒரு வழிப்பாதையாக உள்ள முக்கிய வீதிகள் - வடக்கு ஆளுநரின் அதிரடி

வீதியில் தோன்றியுள்ள குழி

இந்த வீதியில் உள்ள மதகில் சுமார் இரண்டு அடி நீளமும் ஒன்றரை அடி அகலத்திலும் துவாரம் காணப்படுகின்றது.

கொக்கிரீட்டிலான தகடு உடைந்து, அதற்குள்ளே இருந்த போக்கும் உடைந்தே இந்த குழி தோன்றியுள்ளது.

யாழ். அராலி வீதியில் உள்ள மதகில் பாரிய குழி! மக்களுக்கு ஏற்படுத்திய அதிர்ச்சி! | Huge Hole In The Araly Street Road

இந்த வீதியால் அன்றாடம் 789 வழித்தட பயணிகள் சேவை பேருந்து பயணிப்பதுடன், வயோதிகர்கள், பாடசாலை மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் என பல்லாயிரக்கணக்கானோர் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர்.

அத்துடன் எதிரே வருகின்ற ஒரு வாகனத்துக்கு இன்னொரு வாகனம் வழிவிட்டு கொடுத்து பயணிப்பதற்கு ஏற்ற அளவில் இந்த வீதி காணப்படவில்லை.

யாழ் - கொழும்பு புதிய தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு

யாழ் - கொழும்பு புதிய தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு

மக்கள் அசௌகரியம்

அகலத்தில் குறைந்ததாக உள்ளதுடன் இவ்வாறு குழியும் உள்ளதால் இந்த வீதியால் பயணிக்கும்போது உயிர் ஆபத்தான பயணங்களையே எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

பரந்தன் - முல்லைத்தீவு வீதியில், புளியம்பொக்கணைக்கு அருகே உள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால், அண்மையில் அந்த பாலத்தில் விழுந்து இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

யாழ். அராலி வீதியில் உள்ள மதகில் பாரிய குழி! மக்களுக்கு ஏற்படுத்திய அதிர்ச்சி! | Huge Hole In The Araly Street Road

சேதமடைந்த இந்த மதகுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காத ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலையே காணப்படுகிறது.

இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!           
ReeCha
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்