பாகிஸ்தானில் இன்றும் தற்கொலை தாக்குதல் - பல காவல்துறையினர் உயிரிழப்பு
Pakistan
Suicide Attack In Pakistan
By pavan
பாகிஸ்தானில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று காவல்துறையினர் ஒரு வாகனத்தில் சென்ற போது அந்த வாகனம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.
உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் காவல்துறையினர் வாகனம் மீது மோதினார்.
9 காவல்துறையினர் பலி
இதில் குண்டு வெடித்ததில் காவல்துறை வாகனம் நொறுங்கியது. இந்த குண்டு வெடிப்பில் 9 காவல்துறையினர் பலியானார்கள். 15 காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் சமீப காலமாக தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் சமீபத்தில் மசூதி ஒன்றிலும் காவல்துறை தலைமை அலுவலகத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி