சிறிலங்காவுக்கு பாதகமாக மாறிய ஐ.நா அமர்வு - அரச தரப்பு உடன் கொடுத்த உறுதிமொழிகள்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இன்றைய இலங்கை தொடர்பான பரஸ்பர உரையாடலின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார்.
சுயாதீன உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்த தேவையான ஆதரவு மற்றும் வளங்களை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக்கொடுக்குமென அவர் இதன்போது குறிப்பிட்டார்.
புலம்பெயர் மக்களுக்கான அலுவலகத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் அவர்களுடன் இருக்கும் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தலாம் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா தொடர்பான அறிக்கை
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச தரத்துக்கு ஏற்ற புதிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமையில் இன்று ஆரம்பித்த 51 ஆவது அமர்வின் முதலாம் நாள் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விடயம் எடுக்கப்பட்டமை சிறிலங்காவுக்கு பாதகமாக மாறியுள்ளது.
அமர்வு ஆரம்பித்த பின்னர் முதலாவது விடயமாக மியன்மார் நிலவரங்கள் எடுக்கப்பட்ட பின்னர் உடனடியாகவே சிறிலங்கா தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்ட பதில் ஆணையாளர் இலங்கையின் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐ.நா அமர்வின் முதல் நாளே சிறிலங்காவிற்கு வலுக்கும் அழுத்தம்! (நேரலை) |
ஆதரவு நாடுகளின் நிலைப்பாடு
இதனையடுத்து சிறிலங்கா அரச தரப்பு தனது தரப்பில் கருத்துதெரிவித்த பின்னர் மேற்குலக நாடுகள் இலங்கையில் ஜனநாயகம் திரும்பவேண்டும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்திய அதேவேளை சிறிலங்கா ஆதரவு நாடுகள் சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தன.
இன்று மதிய இடைவேளைக்குப் பின்னரும் இலங்கை நிலவரங்கள் மீது விவாதம் தொடரவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஜெனிவாவின் முன் அணிதிரள புலம்பெயர் தமிழருக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்
ஐ.நா முன்றலில் போராட்டத்தில் குதித்த இலங்கையர்கள்