மஹிந்தவின் செயற்பாட்டால் ஏற்பட்ட வினை! பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்

srilanka human rights
By Vasanth Mar 26, 2021 01:47 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபை செயலாளருடன் 2009ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச அரசு உடன்படிக்கை செய்யாமல் இருந்திருந்தால், நாம் இன்று ஜெனிவா நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்காமல் இருந்திருக்க முடியும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் 14 வாக்குகள் மாத்திரமே இலங்கை சார்பாக கிடைத்தன.

அயல் நாடுகளான இந்தியா, நேபாளம் போன்றவற்றின் ஆதரவைக்கூட இந்த அரசாங்கத்தினால் பெற முடியாமல் போயுள்ளது. அயல் நாடுகளுடன் சிறந்த வகையில் உறவுகளை பேண வேண்டும்.

2009 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளருடன் உடன்படிக்கை செய்திருந்தது.

அந்த ஒப்பந்தம் செய்யாமல் இருந்திருந்தால், நாம் இன்று இந்த நிலைமைக்கு முகங்கொடுக்காமல் இருந்திருக்க முடியும். எமது நாட்டு மக்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிற்கச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

இந்த உடன்படிக்கையின் மூலமாக எங்களின் பொறுப்புகளை உள்ளன பொறிமுறையொன்றின் மூலமாக செயற்படுத்வோம் என 2015 இல் ஆட்சி அமைத்தபோது நாம் உறுதியளித்தோம். சர்வதேச சமூகத்துடனான உறவுகள் மூலமாக, ஐக்கிய நாடுகள் சபையால் 2015 இல் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதாக நாம் உறுதியளித்தோம்.

ஐ.நா. மனித உரிமை பேரவையும் அதற்கான தமது பூரண ஆதரவை எமக்கு வழங்கியிருந்தனர். எமது நாட்டில் காணப்படுகின்ற நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக உள்ளக பொறிமுறை செயற்படுத்தியிருந்தோம்.

இதற்கு சர்வதேசத்தின் எந்தவொரு தலையீடும் இருக்கவில்லை.

ஆனால் தற்போது அவ்வாறில்லை. எமது நாட்டை மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு கொடுக்காது, எம்மை நாமே ஆட்சி புரியும் அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின்போது இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2017 ஆம் ஆண்டு எமது ஆட்சி காலத்திலேயே நீக்கப்பட்டது.

இதன் பயனாக 2023 ஆம் ஆண்டு வரை ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எமக்கு கிடைக்கச் செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியே பிரதான காரணமாகும் என்றார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026