வெளிநாடொன்றில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள்
Sri Lanka
Jordan
By Sumithiran
ஜோர்தானில் உள்ள சஹாப் பகுதியில் உணவு கூட இன்றி 350 இலங்கையர்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த மேற்படி இலங்கையர்களே இவ்வாறு சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றரை வருடமாக சம்பளமில்லை
இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் சம்பளம் வழங்காமல் உள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது குறித்து இலங்கை தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்னர்
எனவே உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்னர் தம்மை இலங்கைக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் அவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்