தினமும் இரவில் இலங்கைக்கு படையெடுக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சக்திகள்! காரணம் என்ன?
சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்த பின்னர் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றதாக அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை (27) நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நூற்றுக்கணக்கான இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடலில் காணப்படுகின்றன.
இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு எண்ணற்ற முறைப்பாடுகளை செய்த போதும் அவர்கள் அதை கணக்கில் எடுப்பதில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் இவ்விவகாரம் இரண்டு தனித்தனி நிகழ்வுகளில் விவாதிக்கப்பட்டு ஒரு உடன்பாடு எட்டப்பட்டதாகவும், ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
இந்த வருட இறுதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.