இலங்கை அரசை கண்டித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

government tamil nadu Sri Lankan fisher man hunger strike
By Vanan Feb 15, 2022 12:34 AM GMT
Report

இலங்கை அரசை கண்டித்தும், கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வரும் 21ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் 50க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இலங்கை கடற்படையினரின் தொடர் பிரச்சினை காரணமாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் பகுதியை சேர்ந்த பெரும்பாலான கடற்றொழிலாளர்கள் மீன்பிடி தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்கு சென்றதால் மீன்பிடி தொழிலாளர்கள் இன்றி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்தப் பிரச்சினை குறித்து நேற்று தங்கச்சிமடம் சூசையப்பர் கோயில் வளாகத்தில் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதன்போது, தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்யும் இலங்கை அரசை கண்டித்தும், கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை வலியுறுத்தியும் வரும் 21ஆம் திகதி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் இன்று முதல் ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

கடற்றொழிலாளர்களின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களின் போராட்டங்கள் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் நேரடியாகவும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மீன் பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக வரும் 25 ஆம் திகதி இலங்கை செல்கிறார்.

அப்போது இலங்கை பிரதமர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016