தமிழர் பகுதியில் கொடூரம் : மனைவியை வெட்டிய கணவன் கைது
தனது மனைவியின் கழுத்து மற்றும் கைகளை கூரிய ஆயுத்ததால் கொடூரமாக வெட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குடுமபத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. வாழைச்சேனை ஓட்டமாவடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குடும்ப தகராறு
ஓட்டமாவடி முதலாம் பிரிவு அல்முக்தார் வீதியில் குறித்த கணவன் மனைவி வாழ்ந்து வருகின்றனர்.சம்பவ தினமான இன்று(27) பகல் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குளியலறைக்கு சென்ற மனைவியின் கழுத்து மற்றும் கைகளை கூரிய ஆயுதத்தால் கணவன் வெட்டியுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு
சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். இதனையடுத்து அயலவர்கள் வீட்டிற்கு சென்று பெண்ணை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மனைவியை வெட்டிய 57 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.