மனைவியின் பிறந்த நாளிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர்! கொடூரமான முறையில் கொலை - அம்பலத்திற்கு வந்த தகவல் (காணொளி)
கொழும்பில் பிரபல சிகை அலங்கார நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பத்தும் மல்லவாராச்சி (வயது -33) (Pathum Mallawaarachchi) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
அநுராதபுரம் - எலயாபத்து பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில், அந்த பெண்ணின் சகோதரனுடன் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
குறித்த மோதல் காரணமாக கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பெண்ணின் தாய் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த நபர் எங்கள் மகளுடன் வீட்டிற்கு வெளியே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென என்னை காப்பாற்றுங்கள் என மகள் கூச்சலிட்டார். உடனடியாக அந்த இடத்திற்கு சென்று மகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம்.
சிறிது நேரத்தின் பின்னர் வெளியே சென்று பார்க்கும் போது சிகை அலங்கார உரிமையாளர் கீழே விழுந்து கிடந்தார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் சந்தேக நபரான பெண்ணின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் சிகை அலங்கார நிலையத்தின் உரிமையாளர் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு பென்ஸ் ரக கார் ஒன்று பரிசாக வழங்கி சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபல்யமாகியமை குறிப்பிடத்தக்கது.