மனைவியை கத்தியால் குத்திய கணவர் - யாழில் சம்பவம்
police
jaffna
incident
By Vanan
யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வலி.வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில், நேற்றைய தினம் மாலை கணவன் - மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் போது , 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்திக் காயப்படுத்திய கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.
கத்திக்குத்து காயத்திற்கு உள்ளான மனைவியின் அவலக் குரல் கேட்டு, அயலவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தலைமறைவாகியுள்ள கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.