நான் ராஜபக்சவுக்கு எதிரானவர் அல்ல : பிரசன்ன ரணதுங்க
நான் ராஜபக்சவுக்கு எதிரானவர் என்று சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதேவேளை ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தாம் தெரிவித்த காரணத்தினால், தாம் ரணில் விக்ரமசிங்கவைப் பின்பற்றுபவர் என்றும் கட்சியை பிளவுபடுத்த தயாராகி வருவதாவும் சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவுக்காக
கட்டான மற்றும் திவுலப்பிட்டிய முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த நேரத்தில் ரணிலைத் தவிர வேறு வழியில்லை அதற்காக நான் ரணில் விக்ரமசிங்கவுக்காக முன்னிற்பதாகவும் தான் மனசாட்சிப்படி நடந்ததாகவும் அமைச்சர் கூறினார்.
இது கட்சிக்கோ அல்லது ராஜபக்சவுக்கோ எதிரானது அல்ல என்பதை வலியுறுத்திய அமைச்சர், நாட்டைப் பற்றி சிந்தித்து இந்தக் கருத்தை வெளியிடுவதாகக் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |