"எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமை இல்லை" - அமைச்சர் உதய கம்மன்பில
Srilanka
Udaya Gammanpila
Dollar
Demonstrations
By MKkamshan
ஆர்ப்பாட்டங்கள் எங்களிற்கு டொலரை பெற்றுத்தராது அமைச்சர் என்ற வகையில் எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை என அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையத்தை திறக்குமாறு இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"டொலரை பாதுகாப்பதற்காகவே இலங்கை கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது
கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சப்புகஸ்கந்த எண்ணெய் தொழிற்சாலையின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது அவசியம் என கருதுகிறேன்
எனினும் தொழிற்சங்கங்கள் இதனை புரிந்துகொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மை "என குறிப்பிட்டுள்ளார்.