தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது: பொன்சேகா பகிரங்கம்
தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கு வடக்கு, கிழக்கு நிலவரம் எவ்வாறு உள்ளது என்றும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார் எனவும் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, போர் முடிவுக்கு வந்ததால் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போர் முடிவு
தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது, “விக்னேஸ்வரன் என்பவர் அடிப்படைவாத நோக்கில் அரசியலை முன்னெடுப்பவர். அரசியலில் அவர் முதிர்ச்சியடைந்த நபரும் கிடையாது.
வடக்கு, கிழக்கில் முதிர்ச்சியடைந்த அரசியல்வாதிகள் உள்ளனர், அவர்கள் இவ்வாறு முட்டாள்தனமாகக் கருத்துகளை முன்வைக்கமாட்டார்கள்.
2010 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது வடக்கில் எனக்கு ஒரு இலட்சத்து 50
ஆயிரம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன, அதுவும் போர் முடிவடைந்து குறுகிய
காலப்பகுதிக்குள்.
துரோகம்
அதிபர் தேர்தலின் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 85 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.
வடக்கு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு இருந்தது. தமிழர்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |