நனோ உர இறக்குமதிக்கு யார் பொறுப்பு- வெளிவரும் முரண்பாடான தகவல்
import
fertilizer
Mahindananda Aluthgamage
Shashindra Rajapaksa
By Sumithiran
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நானோ உரம் இறக்குமதி செய்யப்பட்டமைக்கு விவசாய அமைச்சே பொறுப்பு எனவும், அதற்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ(Shashindra Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும், குறித்த உரம் சசீந்திர ராஜபக்ஷவினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) நேற்று தெரிவித்திருந்தார்.
இதேவேளை குறித்த உரத்தினால் எவ்வித பிரயோசனமும் இல்லையென மட்டக்களப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.