கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன்! சபையில் சாமர சம்பத் பகிடி
தன்னை கொலை செய்தால் போயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் மற்றும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில், “நீங்கள் எங்களை கொலை செய்யத் தான் முயற்சிக்கிறீர்கள்.பாதுகாப்பும் பறிக்கப்பட்டுள்ளது.நாங்கள் அதற்கு பயமில்லை.கொலை செய்த பின்னர் போயாக வந்து பழிவாங்குவேன்.
மறைக்கப்பட்ட விடயங்கள்
நீங்களும் பயங்கரவாதிகள் தான் உங்களின் பெரையம் பயங்கரவாத பட்டியலில் தான் சேர்க்க வேண்டும்.மறைக்கப்பட்ட விடயங்கள் எங்களிடம் அதிகம் இருக்கிறது.
எமக்கும் அதிகமாக கதைக்க முடியும்.அப்படி நாங்கள் செய்ய மாட்டோம்.வெலிகம பிரதேச சபைத் தலைவர் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்றவர்.
அவரை பாதாள குழுவில் சேர்க்க வேண்டாம்.நான் உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன்.முடிந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கைது செய்து எந்த பாதாள குழு செய்தது என்று கூறுங்கள் அப்போது நாம் ஒத்துக் கொள்கிறோம்.
உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது,கொலை செய்தவர் யார் என்று கண்டுபிடிப்பது.அதனால் பாதாள குழுவில் அவரின் பெயரை சேர்த்து அவரின் குடும்பத்தை அவஸ்தைகுள்ளாக்க வேண்டாம்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 5 மணி நேரம் முன்
