நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனை - அமைச்சரவை அங்கீகாரம்
நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் (Johnston Fernando), புதிய நான்கு மேம்பாலங்களை அமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கும் ஹங்கேரி அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிதி ஒத்துழைப்புடன் புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
ஹங்கேரியின் எக்சிம் வங்கி மூலம் நிதி வழங்குவதற்காக ஹங்கேரி அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையடுத்து,கொஹூவல மற்றும் கெட்டம்பே மேம்பாலங்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன.
முத்தெட்டுகல புகையிரத கடவை மற்றும் ஹிரிபிட்டிய சந்தி, பஸ்யால சந்தி, நீர்கொழும்பு மரிஸ்டெல்லா சந்தி மற்றும் தலவத்துகொட சந்தி ஆகிய இடங்களில் புதிய பாலங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க இவ்வாறு மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
