ஈரானில் சரமாரித் தாக்குதல்! இலக்குகளை துல்லியமாக தொம்சமாக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகப்பு படை (IDF) கடந்த 24 மணிநேரத்தில் ஈரானின் மேற்குப் பகுதி மற்றும் மத்திய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திறன்களையும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக IDF குறிப்பிட்டுள்ளது.
மௌனத்தில் ஈரான்
இந்த தாக்குதல்களில் “ஆட்சி அதிகாரிகள் செயல்பட்டு வந்த கட்டளை மையங்கள், பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் ஆயுத சேமிப்பு மற்றும் உற்பத்தி நிலையங்கள்” ஆகியவை இலக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல்களின் காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறி வான்வழி காணொளி காட்சிகளையும் IDF வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான் இதுகுறித்து உடனடியாக எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |