ஈரானுக்கு சீனா வழங்கவுள்ள ஆயுதங்கள்! அதிருப்தியில் ட்ரம்ப்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால், அது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட, தோளில் வைத்து ஏவக்கூடிய 300 முதல் 400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கொண்ட சரக்கு சில வாரங்களுக்குள் ஈரானுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ஒப்பந்தத்தின் மதிப்பு 60 மில்லியன் முதல் 70 மில்லியன் டொலர்கள் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
உளவுத்துறை தகவல்
தெஹ்ரான் முக்கிய வெளிநாட்டு கூட்டாளிகளின் உதவியுடன் தனது ஆயுத இருப்பை மீண்டும் நிரப்ப முயன்று வரும் பின்னணியில், ஈரானுக்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்து வியாழக்கிழமை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, “அதாவது, இதுபோன்ற விஷயங்கள் நடப்பதுண்டு, ஆனால் இது ஆச்சரியமாக இருக்கும். அவர் (ஷி ஜின்பிங்) இதில் பங்கேற்க மாட்டேன் என்று என்னிடம் மிகவும் உறுதியாகக் கூறினார்; மேலும் நான் மிகவும் ஏமாற்றமடைவேன் என்பதும் அவருக்குத் தெரியும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |