தவறான பாதையில் நாடு! எச்சரிக்கும் ரணில் தரப்பு
மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டால், அரசியல்வாதிகள் தங்கள் பாதுகாப்பை இழப்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றினால், அவர்களே சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என வஜிர சுட்டிக்காட்டியுள்ளார்.
தவறான பாதையில் நாடு
அத்தோடு, நாடு பல்வேறு காலகட்டங்களில் தவறான பாதையில் பயணித்திருப்பதாக கூறிய அவர், வாக்காளர்களுக்கு தொடர்ந்து பொய்களை கூறி அவர்கள் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால்தான், இந்த நாடு 2000 ஆம் ஆண்டில் சரிந்து ஒரு வருடத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டியிருந்தது என்றும் இதே காரணத்தால் தான் நாடு 2014 ஆம் ஆண்டிலும் சரிந்ததாக அவர் கூறியுள்ளார்.
அரசியல் அனுபவம்
எனவே, அரசியல் கட்சிகள் இனிமேல் பொருளாதாரம் அல்லது வேறு எதையும் பற்றியும் தவறான நம்பிக்கைகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மக்கள் தொடர்ந்து இவ்வாறு ஏமாற்றப்பட்டால், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் எனவும் வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தங்களின் அரசியல் அனுபவத்தின்படி, நாடு மிகவும் ஆபத்தான மற்றும் மோசமான நிலையை நோக்கிச் சென்றுக் கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
