வெளிநாடுகள் செல்பவர்கள் கோரிக்கை விடுத்தால் ... சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
srilanka
abroad
vaccine certificate
By Sumithiran
வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி அட்டை, கடவுச்சீட்டு மற்றும் தேவையான பிற ஆவணங்களை தனி நபர் சமர்ப்பித்தவுடன் சான்றிதழை அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினூடாக வழங்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும், விசேட வைத்திய நிபுணருமான ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
இது அதிகாரபூர்வ தடுப்பூசி சான்றிதழாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
குறித்த சான்றிதழில் கொவிட் தடுப்பூசி பெறப்பட்ட திகதி மற்றும் எந்த வகையான தடுப்பூசியை தனி நபர் பெற்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும்.
சில நாடுகள் தடுப்பூசி சான்றிதழ் இல்லாத பயணிகளின் உள் நுழைவுக்கு அனுமதி வழங்காமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி