ஈரானுக்கு ஏற்பட்ட பேரிடி! கொல்லப்பட்ட புரட்சிகர காவல் படை வீரர்கள்
ஈராக்கில் நடத்தப்பட்ட அமெரிக்க-சவுதி வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் புரட்சிகர காவல் படையை சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஈராக்கின் தியாலா மாகாணத்தில் அர்பயீன் புனிதப் பயணச் சடங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்தபோதே இந்த நால்வரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இந்தத் தாக்குதல்களில் ஆறு ஈரானியப் புனிதப் பயணிகள் கொல்லப்பட்டதாக ஈராக்கின் மக்கள் திரட்டல் படைகளின் (PMF) ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
20 பேர் கொலை
ஈரானில் அவர்களின் தொழில் எதுவாக இருந்தாலும், அவர்கள் போராளிகளாகவோ அல்லது ஆலோசகர்களாகவோ இல்லாமல், யாத்ரீகர்களாகவே ஈராக்கிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

ஈரானிய ஆதரவுப் படைகளின் கூட்டமைப்பான PMF-இன் தகவல்படி, புதன்கிழமை அதிகாலையில் நடந்த இந்த அமெரிக்க-சவுதி தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 32 பேர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |