2027 இல் ஐரோப்பாவை தாக்கும் புடின்: எச்சரிக்கும் அறிக்கை
2027 இல் ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டனை மையமாகக் கொண்ட International Institute of Strategic Studies (IISS) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தநிலையில், புடின் உக்ரைனை ஊடுருவிய உடனேயே, அவர் மற்ற ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பலம்
ரஷ்யா, உக்ரைனுடனான போரில் தனது வீரர்கள் மற்றும் ஆயுதங்களை பெருமளவில் இழந்துவிட்டது.
இதனடிப்படையில், உக்ரைனுடன் போர் நிறுத்தம் ஏற்படும் நிலையில் அது ரஷ்யா தனது படை மற்றும் ஆயுத பலத்தை மீண்டும் அதிகரித்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு, ஆயுத பலம் அதிகரிக்கப்பட்டால் 2027 இல் ஐரோப்பிய நாடுகள் மீது விளாடிமிர் புடின் தாக்குதல் நடத்தக்கூடும் என International Institute of Strategic Studies (IISS) என்னும் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
