தமிழரசுக் கட்சி தொடர்பில் சுமந்திரன் கூறிய விடயம்
தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் தன்னை விமர்சித்த பத்திரிகையாளர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மாநாடு தொடர்பிலான வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்,
நீதிமன்றில் முறைப்பாடு
மேலும், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் எனது ஆட்சேபனையை நான் முன்னதாகவே நீதிமன்றுக்கு அறிவித்துவிட்டேன் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
தன்னை விமர்சித்த பத்திரிகையாளர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் செயற்பாட்டினாலேயே தமிழரசுக் கட்சியின் வழக்கு நீடித்து செல்வதாக சட்டத்தரணி கே. வி தவராசா நீதிமன்ற வளாகத்தில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.