விடுதலைப் புலிகள் பற்றி இளங்குமரன் எம்.பியின் ஏளனப் பேச்சு : தமிழர் தரப்பு கடும் கண்டனம்

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka Karunananthan Ilankumaran
By Raghav Apr 17, 2025 11:27 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு (R. Ilankumaranar) எந்த தகுதியும் இல்லை என அரசியல் செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

யாழில் (Jaffna) வைத்து இன்றைய தினம் (17.04.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தவர்கள் தமிழர்களுக்கு துரோகமிழைத்தவர்கள், இவர்கள் துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நேற்று (16.04.2025) குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பிரதேச சபைகளைக் கைப்பற்றும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு கேள்விக்குறியாகும் என்றும் பதிவுசெய்திருந்தார். 

இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட  இளங்குமரனின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசியல் செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன் கருத்து தெரிவித்தார்.

தென்மராட்சி மண் என்பது தமிழ் பற்றும் இனப்பற்றும் கொண்டவர்கள். அவர்கள் ஒருபோதும் விலை போனதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தென்மராட்சியின் இரண்டு பிரதேச சபைகளை நீங்கள் கைப்பற்றும் பட்சத்தில் தாங்கள் அரசியலிருந்து விலகுவதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க...

யாழில் ஒட்டப்பட்ட அநுரவின் சுவரொட்டியால் வெடித்தது சர்ச்சை

யாழில் ஒட்டப்பட்ட அநுரவின் சுவரொட்டியால் வெடித்தது சர்ச்சை

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

YOU MAY LIKE THIS


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்