சுங்கத்திணைக்களம் ஈட்டிய வருமானம் : பின்னணியிலுள்ள காரணம்
சட்டவிரோதமாக தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத்திலிருந்து சுங்கத்திணைக்களம் அதிகளவு வருமானத்தை பெற்றுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த ஜூன் மாதம் முதல் தடைசெய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவருபவர்கள் பிடிபட்டால், கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை விட 3 மடங்கு அபராதம் அல்லது 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்துவதனால்
அதன் பிரகாரம், கடந்த ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரை சுங்கத்திரையினரால் 760 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டுக்கான மொத்த சுங்க வருமானம் 925 பில்லியன் ரூபாயாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தடைசெய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் கடத்துவதனால், அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு 1.4 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிகரித்து வரும் இவ்வாறான வருமான இழப்பை நிவர்த்தி செய்வதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை தெரிவித்திருந்தது
இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளின்படி, 100 கிராமுக்கு அதிகமாக தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகள் உட்பட தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்துபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்