இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரி அமெரிக்காவில் 2.9 இலட்சம் பேர் பேரணி
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில் இந்தப் போரில் 11 ஆயிரம் பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்திருக்கின்றதுடன் இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு பிடித்து செல்லப்பட்ட பணயக் கைதிகளை விடுவிக்க கோரி, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் 2.9 இலட்சம் பேர் பேரணி ஒன்றை மேற்கொண்டனர்.
நேரலை ஊடாக உரையாற்றினார்
இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் நேரலை காணொளி ஊடாக மக்கள் கூட்டத்தினரிடம் உரையாற்றிய போது ,

“ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதியாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்காக பேரணி நடத்த இவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகம் முழுவதும் ஒவ்வொரு யூதரும் பெருமையுடனும் மற்றும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமைக்காக இப்பேரணி நடைபெறுகிறது.” என தெரிவித்தார்.
கல்லூரி மாணவர்களும் பங்கேற்பு
இந்தப் பேரணியில், கல்லூரி மாணவ மாணவிகளும் பங்கேற்றனர். அவர்கள் பணயக் கைதிகளுக்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்தபடி பேரணியில் ஈடுபட்டனர்.

ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவில் அதிக அளவில் மக்கள் கூடிய நிகழ்வாக இது காணப்படுவதோடு இதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கான துறை தெரிவிக்கின்றது.
யூதர்களுக்கு எதிரான போக்கை கண்டிக்கும் வகையிலும் மற்றும் பணயக் கைதிகளை விடுவிக்க கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்