மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம் : சபையில் சாடிய சாணக்கியன்
நாட்டில் அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட மதுபானசாலைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்களால் நாட்டில் இலஞ்சமாக மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டிருந்தார் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அம்பாறை பெரியநிலாவணையில் உள்ள மதுபானசாலை உரிமங்களை இடைநிறுத்தல் தொடர்பான ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைத்து நேற்று (20) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”சட்டவிரோத மதுபானசாலைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட மதுபானசாலை உரிமையாளர்கள் விபரம் தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும்.
அது தொடர்பில் யார் விசாரணைகளை மேற்கொள்கிறார்கள் என்பது தொடர்பிலான விபரங்களை வெளியிட வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
