மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலைகளுடன் ஒருவர் கைது!
மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையை நேற்று (25-10-2026) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விடயத்தை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எதிரான அமைப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்புக்கு கடற்றொழிலாளர்கள் வழங்கிய இரகசிய தகவல் ஒன்றை, குறித்த அமைப்பினர் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினருக்கு வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, சம்பவ தினமான நேற்று மாலை செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இதன் போது சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சட்டவிரோத சுருக்கு வலையையும் அதன் உரிமையாளரான கடற்றொழிலாளர் ஒருவரையும் கைது செய்ததுடன் அவரிடமிருந்து சுருக்கு வலைகளை கைபற்றி மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக சட்டவிரோத சுருக்கு வலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இவரை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் இன்று (26-10-2026) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |