காவல்துறை காவலில் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்: எழுந்துள்ள கண்டனம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Oct 26, 2026 11:10 AM GMT
Report

அடக்குமுறைச் சட்டங்கள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே காவல்துறை காவலில் இளைஞர்கள் தாக்கப்பட்டு உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றம் சாட்டியுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் நேற்று (25-10-2027) காலை ஹோமாகம காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இறந்தவர், கிரிவத்துடுவ, முனமலேவத்த எனும் இடத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்குத் தந்தையான 29 வயது இஷாரா ஹர்ஷ குமார என்பவராவார்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

 

நண்பரும் கைது

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

காவல்துறை காவலில் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்: எழுந்துள்ள கண்டனம் | Youth Dies In Homagama Police Custody

ஒக்டோபர் 25 ஆம் திகதி அதிகாலை சுமார் 3 மணியளவில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்துக் கொண்டிருந்த இஷார ஹர்ஷ குமாரவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரது நண்பரும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது அத்தோடு தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

இஷாரவை முன்னரும் கஹதுடுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார்.

போலி சுற்றறிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு அவசர எச்சரிக்கை!

போலி சுற்றறிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு அவசர எச்சரிக்கை!

வைத்தியசாலையில் அனுமதி

அப்போது தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குற்றப்பிரிவின் உப காவல்துறை பரிசோதகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் குறித்த அதிகாரி ஹோமாகம காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இஷார கைது செய்யப்பட்ட போது தனிப்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் பழிவாங்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது.

காவல்துறை காவலில் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்: எழுந்துள்ள கண்டனம் | Youth Dies In Homagama Police Custody

இஷாரவை பார்ப்பதற்காக காவல் நிலையத்துக்குச் சென்ற உறவினர்கள், காவல்துறை அதிகாரி குருசிங்க என்பவரால் அவர் கைவிலங்கிட்டு குற்றப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதையும் பின்னர் சுமார் ஐந்து பேர் அவரைத் தூக்கிக்கொண்டு வந்ததையும் கண்டுள்ளனர்.

அவரது வாயின் இருபுறங்களிலும் இரத்தம் வழிந்துள்ளதுடன் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு உறவினர்கள் கோரியபோதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இஷாரவின் மனைவியின் கையடக்கத் தொலைபேசியைப் காவல்துறையினர் பறித்து தாக்குதல் தொடர்பான காணொளிகளை அழித்ததாகவும் வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட காணொளிகளும் அழிக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மோதல்கள் தீவிரமடையக்கூடும்...! உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை

மோதல்கள் தீவிரமடையக்கூடும்...! உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை

சுயாதீனமான விசாரணை

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மனைவி, குழந்தை, பெற்றோர் மற்றும் நண்பர்கள் இஷாரவை இழந்துள்ளனர் அத்தோடு அவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

வெலிக்கடை காவல் நிலையத்தில் உயிரிழந்த சத்சர உள்ளிட்டோருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

காவல்துறை காவலில் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்: எழுந்துள்ள கண்டனம் | Youth Dies In Homagama Police Custody

எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள அரச பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதாகக் கூறப்படும் சட்டம் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

24 மணிநேரத்துக்குள் ஒருவர் காவல்துறை காவலில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை காணப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள போது 72 மணிநேரம் தடுத்து வைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே, இவ்வாறான சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

சிவப்பு எச்சரிக்கை - தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல் - மிகுந்த அவதானம்

சிவப்பு எச்சரிக்கை - தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல் - மிகுந்த அவதானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026