சட்டவிரோத மண் கொள்ளையில் ஈடுபடும் பிரஜா சக்தி தலைவர் மற்றும் குழுவினர்......!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் பகுதியில் சட்டவிரோத மண் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட சிலரை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, நாகர் கோவில் மேற்கு பகுதியில் சட்டவிரோத மண் கொள்ளை நடைபெறுவதாக இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி, உடனடியாக அந்த இடத்திற்கு சென்ற அதிகாரிகள், பிரஜா சக்தி தலைவரும் அவரது குழுவினரும் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பில் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் தெரிவித்ததாவது,
“கிராமங்களில் ஏற்பட்ட இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தேசிய மக்கள் சக்தியினால் தெரிவு செய்யப்பட்ட பிரஜா சக்தி தலைவர் மற்றும் அவரது குழுவினரின் இவ்வாறான செயல்கள் சமூகத்தில் பெரும் கவலைக்குரியது.
இந்த சம்பவம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரிடம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் தகவல் அளித்தபோது, இதை வெளியிடக்கூடாது என அறிவித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |