விசேட விமானத்தில் நாடுகடத்தப்பட்ட 41 இலங்கையர்கள்

Bandaranaike International Airport Sri Lanka Immigration Australia
By Vanan Jun 19, 2022 10:18 AM GMT
Report

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத பயணம்

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகில் பயணித்த நிலையில், நாடு கடத்தப்பட்ட 41 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்களில் 37 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத குடியேற்ற முயற்சியுடன் நேரடியாக தொடர்புபட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து 41 பேருடன் பயணித்த படகை கிறிஸ்மஸ் தீவில் வைத்து அவுஸ்திரேலிய கடலோர காவல்படையினர் இடைமறித்திருந்தனர்.

16 வயதுக்கு குறைந்த ஆறு பேரும் 35 வயது வந்தவர்களும் குறித்த படகில் பயணித்துள்ளனர். இவர்கள் நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்பு, தொடுவாய் மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

விசேட விமானத்தில் வந்திறங்கினர்

விசேட விமானத்தில் நாடுகடத்தப்பட்ட 41 இலங்கையர்கள் | Illegally Boarding Australia 41 Persons Arrive Sl

இந்த நிலையில் 100 இற்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியப் படை வீரர்கள் அடங்கிய விசேட விமானத்தில் குறித்த 41 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த குழுவினர் நேற்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நேற்றிரவு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மர்லன் ஜயசூரிய முன், முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த குழுவில் இருந்த 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

விசேட விமானத்தில் நாடுகடத்தப்பட்ட 41 இலங்கையர்கள் | Illegally Boarding Australia 41 Persons Arrive Sl

சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் நேரடியாக ஈடுபட்ட நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கானது, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021