வயிற்றில் கன்றுகளுடன் பசுமாடுகள் வெட்டிக்கொலை
மாவனெல்லை - ஹெம்மாதகம வீதியில் திரிங்காதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் 8 கால்நடைகளை கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் கேகாலை கட்டளை அதிகாரி காவல் பரிசோதகர் எல்.எம்.என்.விஜேசிங்கவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அதிகாரிகள் குழுவொன்று மாவனெல்லை - ஹெம்மாதகம வீதியில் திரிங்கதெனிய பிரதேசத்தில் உள்ள குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
அனுமதியின்றி வெட்டப்பட்ட 8 மாடுகளின் உடல்களை வீட்டில் கவல்துறையினர் கண்டுபிடித்தனர். கொல்லப்பட்ட 8 மாடுகளில் ஒன்று ஆண் என்றும், மற்ற ஏழும் பசுக்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிறக்கவிருந்த பசுவும் கொல்லப்பட்டு, கன்றுக்குட்டியை வெளியில் கொண்டு சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஏனைய ஆறு பசுக்களையும் பரிசோதித்த மாவனல்லை கால்நடை வைத்தியர் அவற்றிலும் இளம் கன்றுகள் இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டு, குறித்த மாடுகளின் உடல்கள் அழிக்கப்படும் என, காவல்துறையினர் தெரிவித்தனர்.