பாடகி பவதாரிணியின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்
Ilayaraaja
Yuvan Shankar Raja
Colombo
Chennai
Death
By Shadhu Shanker
இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லபட்டு, பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இலங்கையில் காலமானார்.
நேற்றையதினம்(25) மாலை 5.30 மணியளவில் உயிரிழந்த பவதாரணியின் உடல் இன்று இந்தியா எடுத்து செல்லப்பட்டது.
இறுதி கிரியைகள்
இதனை தொடர்ந்து தியாகராயநகரில் உள்ள இளையராஜா வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி கிரியை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி