பாரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி கனடா: வெளியான தகவல்
அமெரிக்காவின் சுங்க வரி பாதிப்பிற்கு பின்னும் கனடாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட நன்றாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சர்வதேச நாணய நிதியம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் உள்ள சில விலக்குகள் இந்த வர்த்தக மோதலின் பாதிப்பை குறைத்ததாக அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை
இருப்பினும், வேலை வாய்ப்பு மற்றும் முதலீட்டுப் போக்கு தளர்ந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.
அத்தோடு, பொருட்களின் விலை சரிவு, வெளிநாட்டு கேள்வி குறைவு, குடியேற்றம் குறைவு மற்றும் சுங்க வரி நிச்சயமற்ற நிலை ஆகியவை கனடாவின் பொருளாதார வளர்ச்சியை தாமதப்படுத்தும் காரணங்களாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில், வரும் மாதங்களில் பொருளாதார அபாயங்கள் சமநிலைப்படுத்தப்பட்டாலும் அதிகப்படியான நிச்சயமற்ற நிலை நீடிக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
இந்த அறிக்கை கனடா பொருளாதாரத்தைப் பொறுத்து சர்வதேச நாணய நிதியம் மேற்கொள்ளும் வழக்கமான மதிப்பீட்டின் ஒரு பகுதியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கனடா அரசின் பாதீடு பொதுமக்கள் முதலீட்டை அதிகரிப்பது சரியான முடிவு என சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |