சர்வதேச அதிகாரப்போட்டியில் பகடைக்காயாக மாறிய இலங்கை
சர்வதேச அரசியலுக்கான அதிகாரப்போட்டியில் இலங்கை பகடைக்காயாக பயன்படுத்தப்படுகிறது என மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளரான லஹிரு வீரசேகர கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிதறிப்போகும் நிலைமை
மேலும் தெரிவித்த அவர், “சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு ஏற்ற வகையிலேயே து செயற்பாடுகள் அமைந்துள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்று அவை நடைமுறைப்படுத்தப்படும் நிலை காணப்படுகிறது.
அமெரிக்காவினதும் இந்தியாவினதும் பொருளாதார மத்திய நிலையங்களை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியில் சர்வதேச அரசியலுக்கான அதிகாரப்போட்டியிடம் இலங்கை பகடைக்காயாய் பயன்படுத்தப்படுகிறது.
உலகத் தலைவர்கள் மற்றுமொறு உலக யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கும் செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
நாம் ஒரு சிறிய நாடாக இருந்து அதற்குள் சிதறிப்போகும் நிலைமை உருவாகியுள்ளது.
நாட்டிலுள்ள இளம் யுவதிகளின் வாழ்வை அதற்குள் இழுத்துப் போடுவதற்கு ரணில் ராஜபக்சவுக்குள்ள உரிமை என்னவென்பதை நாம் வினவுகின்றோம்” - என்றார் .
