சிறிலங்கா தொடர்பில் தவறான அபிப்பிராயம் - சீர்செய்யத் தயாராகும் கோட்டபய

sri lanka meeting un gotabaya
By Vanan Sep 16, 2021 09:06 PM GMT
Report

சிறிலங்கா தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் பல்வேறு தவறான அபிப்பிராயங்களைச் சீர்செய்வதற்கு இம்முறை ஐ.நா பொதுச் சபை கூட்டத்தொடரை ஜனாதிபதி பயன்படுத்திக்கொள்வார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க நம்பிக்கை வெளியிட்டார்.

இதனிடையே சிறிலங்காவின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிப்புறப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஊடகச் சந்திப்பு நேற்று காணொளி காட்சி தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்டது. ஜெனிவா குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் மற்றும் சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கை” எனும் தலைப்புகளின் கீழ் இந்த ஊடகச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது மனித உரிமைகளுக்குள் மறைந்திருந்து சிறிலங்காவின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்வதை சீனா, ரஷ்யா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, பாகிஸ்தான், ஈராக், வெனிசியூலா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்து சிறிலங்காவுடன் கைகோர்த்து நின்றதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தைப் பின்பற்றல், பயங்கரவாதத்தை ஒழித்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் கொண்டுள்ள பொறுப்புணர்வு அவர்களின் விசேட பாராட்டடை பெற வைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

ஆசிய வலயத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டும் போது சிறிலங்காவானது அமைதியான நாடாக விளங்குகிறது என ஜயநாத் கொலம்பகே கூறினார். சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கையானது சீரமைக்கப்பட்ட கொள்கையாகும் என்று எடுத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர், அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு அதிகாரப் போட்டிகளில் சிக்கிக்கொள்ளாது முன்னோக்கி நகர்வதே சிறிலங்காவின் நோக்கமென்றும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த ஊடகச் சந்திப்பில் விசேட உரையாற்றிய ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க , “கொவிட் சவாலை வெற்றிகொள்வது மற்றும் எதிர்காலத் திட்டங்கள்” என்ற உள்ளடக்கத்துடனேயே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் இம்முறை பங்கேற்கவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் அரச தலைவர்களதும் உரைகள் அமையவுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்வரும் 22ஆம் திகதி ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார். அதற்கிடையில் ஐ.நா செயலாளரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். அதனைவிட வேறு நாட்டுத் தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார். இது தொடர்பிலான உறுதிப்படுத்தல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் எமது நாடு தொடர்பில் பல்வேறு நிலைப்பாடுகளை கொண்டிருக்க முடியும். அது சரியானதாகவும் இருக்கலாம், பிழையானதாகவும் இருக்கலாம். எனினும் அதனை தெளிவுபடுத்த வேண்டியது ஒரு நாட்டுத் தலைவரின் கடமை.

ஜனாதிபதிக்கு ஐ.நா செயலாளரை சந்திக்க 15 நிமிடங்கள் கிடைக்கும். அந்தச் சந்தர்ப்பத்தில் நாடு தொடர்பில் காணப்படும் பிழையான விம்பத்தை இல்லாது செய்யவும், அரசாங்கம் மேற்கொண்ட நல்ல விடயங்களை தெளிவுபடுத்தவும் கிடைக்கும் சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024