இலங்கை மீதான நம்பிக்கை இழக்கப்படும் அபாயம்
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படுமாக இருந்தால் அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையை அது இழக்கச் செய்யும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். கணேஷமூர்த்தி தெரிவித்தார்.
அவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்க்கப்படும் பட்சத்தில், பேச்சுவார்த்தைகள் தோல்வி அடையலாம் அல்லது இன்னும் காலம் தாழ்த்தப்படலாம் என எமது ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட போது கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், நாட்டின் தற்போதைய நிலைமை இன்னும் சரிவடையும் என்பதுடன், அடிமட்ட மக்களே கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, அவர்களின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் பாரிய அளவில் நிதியை ஒதுக்க வேண்டும் என்பதும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் ஒன்றாக உள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிட்டார்.