“12,000 குடும்பங்களை உடனடியாக வெளியேற்றுங்கள்” அதிகாரிகளுக்கு மகிந்த அவசர உத்தரவு (காணொளி)
மழையுடனான சீரற்ற காலநிலையால் அபாய மண்டலங்களில் வசிக்கும் 12,000 குடும்பங்களை உடனடியாக அவ்விடங்களை விட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (16) இடம்பெற்ற கூட்டத்தின் போதே பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
கடந்த வாரங்களில் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், தொற்றுநோயால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு சுமார் 31,475 பேரை முகாம்களில் அடைப்பதை விட, அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 15,000 குடும்பங்கள் ஆபத்து வலயங்களில் வசிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் 3,000 குடும்பங்கள் மட்டுமே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எஞ்சியுள்ள 12,000 குடும்பங்களை உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்திருந்தார்.
You May Like This